Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செந்துறையில் சூசையப்பர் ஆலய ... குமரகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம்: கேரள அரசுக்கு சிக்கல்
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம்: கேரள அரசுக்கு சிக்கல்

பதிவு செய்த நாள்

10 மே
2019
03:05

பூரம் திருவிழா : கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மா.கம்யூ., அரசு பதவியில் உள்ளது. அங்கு, வரும் மே 13ம் தேதி தொடங்குகிறது பூரம் திருவிழா. இதில் திருச்சூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான கேரள மக்கள் பங்கேற்பர். இதனால் பிரச்னையை சுமூகமாக தீர்க்க, யானை உரிமையாளர்கள் உடன் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ராமச்சந்திரன் : பத்தரை அடி உயரமுடைய 54 வயதான ராமச்சந்திரன் என்ற யானையை இந்த ஆண்டு திருவிழாவில் அழைத்து வர திருச்சூர் மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார். அந்த யானை கடந்த பிப்ரவரி மாதத்தில் இரண்டு பேரை மிதித்துக் கொன்றுவிட்டது.

திருவிழாவில் இரைச்சல் மற்றும் பட்டாசு வெடிக்கும் ஓசையைக் கேட்டு யானை மிரளக் கூடும் என்பதால் அந்த யானைக்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் பல ஆண்டுகளாக பாரம்பரிய வழக்கப்படி அந்த ராமன் யானைதான் மற்ற யானைகளை. அணி வகுப்பில் வழி நடத்திச் செல்லும் என்று அந்த யானையின் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக யானை உரிமையாளர்களை அழைத்து திருவனந்தபுரத்தில் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பணிந்த அரசு: சில நிபந்தனைகளுடன் 45 நிமிடங்கள் மட்டும் அலங்கரிக்கப்பட்ட ராமச் சந்திரன் யானையை பேரணியில் அழைத்துச் செல்ல அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பான வழக்கு இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சபரிமலை விவகாரத்தை அடுத்து, தற்போது பிரபலமான திருச்சூர் பூரம் திருவிழாவிலும், கேரள மா.கம்யூ., அரசு சிக்கலில் மாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar