பதிவு செய்த நாள்
10
மே
2019
03:05
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற் சவம், நேற்று (மே., 9ல்) காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும், சுப்ரமணிய சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும்.இந்த திருவிழா, நேற்று
(மே., 9ல்)காலை, 5:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாள் சப்பர வாகனத்தில், வள்ளி, தெய்வானையுடன் முருகர் எழுந்தருளி, வீதியுலா சென்றார்.தினமும் காலை, இரவு, சுவாமி வெவ்வேறு வாகனங்களில் செல்லும் வீதியுலா நடக்கவுள்ளது; 20ல், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், பிரம்மோற்சவத்திற்காக, நடப்பாண்டு, சுவாமி வீதியுலாவுக்கு, இரு புதிய வாகனங்கள் செய்யப்பட்டுள்ளன.தனியார் பங்களிப்பில் செய்யப்பட்ட, பூத மற்றும் புலி வாகனம், தலா, 1.70 லட்சம் ரூபாயில், கும்பகோணத்தில் செய்யப்பட்டு, நேற்று (மே., 9ல்) அதிகாலை, காஞ்சிபுரம் எடுத்துவரப்பட்டன. பின், பூஜைகள் முடிந்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.