பதிவு செய்த நாள்
10
மே
2019
03:05
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோவில் உண்டியலில், பக்தர்கள், 6.22லட்சம் ரூபாயை, காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் கோவில்,
தென்னிந்தியாவிலேயே முதன்மையானதாக திகழ்கிறது.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த,மூன்று உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.கடந்த மாதம், 19ம் தேதி, சித்ரா பவுர்ணமி உற்சவம் விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி, இரண்டு தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டன. தற்காலிக உண்டியல் கடந்த வாரம் திறக்கப்பட்டதில், ஒரே நாளில், 72 ஆயிரத்து,850 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.
இந்நிலையில், நிரந்தர உண்டியல், நேற்று முன்தினம் (மே., 8ல்)திறக்கப்பட்டது. உதவி ஆணையர், ரமணி, செயல் அலுவலர், முருகேசன் முன்னிலையில், காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 6.22லட்சம் ரூபாய், காணிக்கையாக கிடைத்தது.