பரமக்குடி: மே 1௧-பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆழ்வார்கள் சன்னதியில் ராமானுஜருக்கு 1002 வது ஜெயந்தி விழா நடந்தது.கி.பி. 1017 ல் பிறந்த ராமானுஜருக்கு நேற்று 1002வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து காலை 9:00 மணி முதல் ஹோமம், அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனை நடந்தது. பின்னர் ராமானுஜர் ரதவீதி உலாவும், பெருமாள் சன்னதியில் சாற்றுமுறை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள், திருநாம சங்குசக்கர குழுவினர் செய்திருந்தனர்.