பதிவு செய்த நாள்
12
மே
2019
03:05
வால்பாறை:வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில் கொடிமர கும்பாபிஷேக விழா நேற்றுதுவங்கியது.வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலில், வரும், 16 ம் தேதி கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.விழாவையொட்டி நேற்று காலை, 5:00 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு ஆஜாரியவரணம், முளையிடல், பிரசாதசுத்தி, அஸ்தரகலச பூஜை, வாஸ்து கலசாபிஷேகம், புண்ணாயாகம், அத்தாழ பூஜை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.வரும், 15ம் தேதி மாலை, 3:00 மணிக்கு வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் புதிய கொடி ஆகியவை எடுத்து, தாலப்பொழியுடன் பக்தர்கள் ஊர்வலமாக ஐயப்ப சுவாமி கோவிலுக்கு செல்கின்றனர். இரவு, 7:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. வரும், 16ம் தேதி காலை, 10:00 மணிக்கு கொடிமரத்திற்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.