அன்னூர்:குமரன்குன்று தேர் வெள்ளோட்டம் வரும், 18ல் நடக்கிறது.குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 49 ஆண்டுகளாக தைப்பூச நாளில் தேரோட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் தேரின் அச்சு, சக்கரம் ஆகியவை பழுதடைந்து விட்டன.இதையடுத்து, அறநிலையத்துறை சார்பில், புதிதாக இரும்பு சக்கரம் மற்றும் அச்சு பொருத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, வெள்ளோட்டம் வரும், 18ம் தேதி நடக்கிறது. காலை 9:00 மணிக்கு அபிஷேகமும், பின்னர், அலங்கார பூஜையும் நடக்கிறது. 10;30 மணிக்கு தேர் வெள்ளோட்டம் துவங்குகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.