மேட்டுப்பாளையம் பிளேக் மாரியம்மனுக்கு திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2019 02:05
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேட்டுப்பாளையம் அண்ணாஜி ரோடு, எம்.எஸ்.ஆர்.புரத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், 112ம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 30ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. இம்மாதம், 7ம் தேதி மதுரை வீரன் அழைப்பும், அம்மன் ஊர்வல மும் நடந்தது. நேற்று (மே., 12ல்) காலை ஊட்டி மெயின் ரோட்டில் மைதானம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் அலகு குத்தினர். பின்பு பக்தர்கள் ஊர்வலமாக எம்.எஸ்.ஆர்.,புரம் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மஞ்சள் நீராட்டு நிறைவடைந்து, நேற்று (மே., 12ல்) மகாதீபாராதனையும் நடந்தது. இன்று (மே., 13ல்) அன்னதானமும், மறுபூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.