நெல்லிக்குப்பம்: வெள்ளப்பாக்கம் சிவலோகநாதர் கோவிலில் மழை வேண்டி திருவாசகம் முற்றோதல் நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் பழமையான சிவகாமசுந்தரி உடனுறை சிவலோக நாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் மக்கள் அமைதியாக வாழவும் அக்னி நட்சத்திரம் நிவர்த்திக்காகவும், மழை வேண்டியும் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி கீதா முத்தையன் தலைமையிலான சிவனடியார்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள், காலை முதல் இரவு வரை தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தினர். மழைக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.