திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2019 03:05
திருப்புத்தூர்:திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று (மே., 13ல்) திருக்கல்யாணம் நடக்கிறது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. மே 9ல் கொடியேற்றி விழா துவங்கியது.
தினசரி இரவு 8:00 மணிக்கு மண்டபகப்படிதாரர் தீபாராதனையும், 9:00 மணிக்கு ஐம்பெரும் கடவுளர்கள் பல்வேறு வாகனங்களில் திருவீதி வலமும் நடைபெற்று வருகிறது. நேற்று (மே., 12ல்) காலை திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு தீபாராதனை நடந்தது. தேவஸ்தான ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்றார். தொடர்ந்து இரவில் சுவாமி வெள்ளிக்கேடகத்தில் வீதி உலா நடந்தது. இன்று (மே., 13ல்) காலை 9:00 மணிக்கு அம்மன் தவத்திற்கு எழுந்தருளலும், காலை 10:15 மணிக்கு திருத்தளிநாதர் சுவாமிக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. யானை வாகனம் மற்றும் பூப்பல்லக்கில் சுவாமி திருவீதி உலாநடைபெறும். தொடர்ந்து மே17ல் தேரோட்டம், மே 18 ல் தெப்பம் நடைபெறும்.