பதிவு செய்த நாள்
14
மே
2019
02:05
தொண்டாமுத்தூர்:கலிக்கநாயக்கன்பாளையத்தில், உள்ள தண்டுமாரியம்மன் கோவிலில், திருக்கல்யாண விழா நடந்தது.
தொண்டாமுத்தூர் அடுத்த, கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. கடந்த ஏப்., 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது.மே 5ம் தேதி கம்பம் நடுதலும், 12ம் தேதி நகை அழைத்தலும் நடந்தது.
நேற்று (மே., 13ல்) காலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதன்பின், நொய்யல் ஆற்றிலிருந்து சக்தி கரகம் அழைத்து வந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பூச்சட்டி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.அதனை தொடர்ந்து, பொங்கல் வைத்தல், அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தி பரவசம் அடைந்தனர். இக்கோவிலில், உள்ள மற்றொரு தெய்வமான, மாகாளியம்மன் திருக்கல்யாண விழா நாளை நடக்கிறது.