பதிவு செய்த நாள்
14
மே
2019
02:05
உடுமலை:உடுமலை, அமராவதி நகர், அமராவதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நாளை (மே.,15ல்) நடக்கிறது.இக்கோவிலில், திருவிழா, கடந்த மாதம் 30ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 15 நாட்களுக்கு, அம்பாளுக்கு, அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இன்று (மே.,14ல்), இரவு, சக்தி கும்பம் மற்றும் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மே.,15ல்), அதிகாலை, 5:00 மணிக்கு அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவமும், அபிஷேக பூஜை மற்றும் விசேஷ பூஜைகள் நடக்கிறது.மாலை, 5:00 மணிக்கு பூவோடு ஆரம்பமாகிறது. மறுநாள், மஞ்சள் நீராடுதல் மற்றும் சப்பரம் திருவீதி உலா நடக்கிறது.