பதிவு செய்த நாள்
14
மே
2019
02:05
மடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட மைவாடி மிக பழமையான கிராமம் ஆகும். தனி ஊராட்சியான இதை சார்ந்து பல கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். நூறு ஆண்டுக்கும் மேலாக நடக்கும் விழாவில், திருக்கல்யாணம் குறிப்பிடத்தக்கதாகும், இதில், திரளாக பக்தர்கள் பங்கேற்று வழிபடுவர்.கடந்த மாதம் 30ம் தேதி நோன்பு சாட்டு தலுடன் விழா தொடங்கியது.
கடந்த 7ம் தேதி இரவு பூவோடு வைத்த பின்பு, நள்ளிரவு, 1:00 மணிக்கு விழா கம்பம் நடப் பட்டது. மே 8ம் தேதி காலை, 7:00 மணி தொடங்கி, அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.இன்று (மே., 14ல்) இரவு, 7:00 மணிக்கு தீர்த்தம் செலுத்துதல், 10:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்தல், நாளை (மே., 15ல்)அதிகாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.