பதிவு செய்த நாள்
14
மே
2019
02:05
திருப்பூர்:வைகாசி விசாகத்தேர்த்திருவிழாவில் நேற்று, (மே., 13ல்)ஸ்ரீசோமாஸ்கந்தர் பூத வாகனத்தில் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் (மே., 12ல்) கொடியேற்ற வைபவம் நடந்தது. நேற்று (மே., 13ல்) காலை, சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.
மாலை, 6:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப் பெருமாள் மற்றும் விசாலாட்சியம் மன் சமேத விஸ்வேஸ்வர சுவாமி திருவீதியுலா சென்றனர்.வீரராகவப் பெருமாள், தேவி யருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சோமாஸ்கந்தர், பூத வாகனத்திலும், விசாலாட்சியம்மன் அன்ன வாகனத்திலும், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, மங்கள இசை வாத்தியத்துடன் தேர்வீதிகளில் உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.