புதுச்சத்திரம் பொன்னியம்மன் கோவிலில் 17ம் தேதி செடல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2019 02:05
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த மேட்டுப்பாளையம் பொன்னியம்மன் கோவிலில், 67வது ஆண்டு செடல் திருவிழா, வரும் 17ம் தேதி நடக்கிறது.விழா இன்று (15ம் தேதி) மாலை 6.00 மணிக்கு கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. சிறப்பு விழாவான செடல் உற்சவம் 17 ம் தேதி நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.காலை 9.00 மணிக்கு தேர், செடல் உற்சவம் நடக்கிறது. மதியம் 1.00 மணிக்கு சாகைவார்த்தல், இரவு 9.00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. 18ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு, 19 ம் தேதி மஞ்சள் நீர் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.