கடலூர் : கடலூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் வரும் 17ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
கடலூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. வரும் 22 ம் தேதி வரை நடக்கும் உற்சவத்தில், நேற்று முன்தினம் (மே., 13ல்) காலை, அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது. இரவு 12 மணிக்கு மகாமேரு தெருவடைச் சான் உற்சவம் நடந்தது.நேற்று (மே., 14ல்) காலை யானை வாகனத்திலும், இரவு வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது.இன்று (மே., 15ல்)சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
வரும் 16ம் தேதி குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. 17 ம் தேதி காலை 8:30 மணிக்கு திருதேரோட்டம் வடம் பிடித்தல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.