குன்னூர்: குன்னூர் மவுன்ட் பிளசன்ட் சகாயமாதா ஆலய, 59வது ஆண்டு திருவிழா நடந்தது. கடந்த, 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் நவநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழா நாளில் அருட்சாதன கொண்டாட்ட விழா, ஆலய வாசக மேடை அர்ச்சிப்பு விழா, சிறப்பு திருப்பலி ஆகியவை நடந்தன. ஊட்டி மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து அன்னையின் தேர்பவனி நடந்தது. ஏற்பாடுகளை ஹென்றி மரிய லூயிஸ் உட்பட பலர் செய்திருந்தனர்.