மேட்டுப்பாளையம்: 21ம் தேதி அம்மனுக்கு கம்பம் நடுதலும், 28ம் தேதி குண்டம் கண் திறப்பு விழா நடைபெறுகிறது. அன்று இரவு குண்டத்தில் பூ வளர்த்தலும், பவானி ஆற்றிலிருந்து சக்தி கரகமும், அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.29 அன்று காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், 30ம் தேதி அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. 31ம் தேதி மஞ்சள் நீராட்டும், 108 இளநீர் அபிஷேகமும், 4ம் தேதி மறுபூஜையும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.