பதிவு செய்த நாள்
17
மே
2019
11:05
பழநி, வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
நாளை தேரோட்டம் நடக்கிறது.பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், வைகாசி விசாக திருவிழா மே 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 21 வரை பத்து நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானையுடன் தங்கமயில், வெள்ளி, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கின்றார்.முக்கிய நிகழ்ச்சியாக இன்று (மே 17ல்) இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை வைகாசி விசாகத்தையொட்டி மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்து வருகின்றனர்.