அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் சித்தகிரி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் கிரிவலம் நடந்தது. பவுர்ணமியை முன்னிட்டு, மேல்மலையனுார் தாலுகா, அவலுார்பேட்டையில் சித்தகிரி முருகன் மலை அடிவாரத்தை சுற்றி நேற்று முன்தினம் பொது மக்கள் கிரிவலம் சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டனர்.