ஆர்.கே.பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2019 03:05
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, விளக்கணாம்பூடி கிராமத்தில் உள்ளது திரவுபதியம்மன் கோவில். மூன்று வாரங்களாக, கோவிலில் அக்னி உற்சவ திருவிழா நடந்து வருகிறது.
இறுதிகட்டமாக, நேற்று (மே., 19ல்) காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை, 6:00 மணியளவில், அக்னி பிரவேசம் நடந்தது. இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள், திரவுபதியம்மனுடன், அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் விரதத்தை நிறைவு செய்தனர்.