பதிவு செய்த நாள்
20
மே
2019
03:05
எலச்சிபாளையம்: சின்னமணலி மாரியம்மன், பச்சியம்மன் கோவிலில், வரும், 24ல் திருவிழா நடைபெற உள்ளது.
எலச்சிபாளையம் ஒன்றியம், சின்னமணலியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 16ல் தொடங்கியது. 17ல் பச்சியம்மனுக்கு பூச்சாற்றப்பட்டது. வரும், 23 இரவு, 9:00
மணிக்கு அம்மன் திருவீதியுலா மற்றும் சக்தி அழைத்தல். மறுநாள் காலை பொங்கல் வைத்தல், மதியம், 1:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை, 4:30 மணிக்கு பொங்கல் வைத்தல், இரவு, 8:00 மணிக்கு மா விளக்கு அழைத்தல், 25 காலை, 11:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.