கோவை காமாட்சிபுரி ஆதீனம் சக்தி பீடத்தில் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2026 11:01
கோவை; கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் அலங்காரி அங்காளபரமேஸ்வரி அன்னையின் 45ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் மற்றும் குண்டம் திருவிழா நேற்று துவங்கியது. காலையில் விநாயகர் வேள்வி, 108 விநாயகர் பூஜை, கோமாதா பூஜையுடன் விழா துவங்கியது. காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பூஜைகள் செய்ய திரளான பக்தர்கள் அம்மன் ஆசி பெற்றனர். மதியம் அம்மன் அபிஷேகம், அலங்கார வழிபாடு, மாலையில் முனீஸ்வர பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா 26ம் தேதி இடம்பெறுகிறது.