கமுதி : கமுதி அருகே கீழ மாவிலங்கையில் ஸ்ரீபேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம், முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்னுச்சாமி தலைமையிலும், சென்னை அங்குச்சாமித்தேவர், முத்துமணித்தேவர் அறக்கட்டளை நிறுவனர் கோமேதகன் முன்னிலையிலும் நடந்தது.
கீழ மாவிலங்கை மேலத்தெரு சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபேச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஆறு கால யாக பூஜைகளுடன், கோமாதா வலம், கருட வாகன புறப்பாட்டுக்கு பின், கோயில் கலசங்களில் உள்ள கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முத்துமணித்தேவர் இருளாயி அம்மாள் குடும்பத்தினர் சார்பில் 3 நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், நாடகம் நடந்தது.