கடலூர் : கட்டமுத்துப்பாளையத்தில் உள்ள 41 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (மே., 23ல்) நடக்கிறது.
பண்ருட்டி வட்டம், பூண்டி அருகே கட்டமுத்துப்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள, செல்வ விநாயகர், நாக சர்ப்பம், பரிவார தேவதைகளுக்கும், சீதா லட்சுமண பரத சத்ருகண ராமச்சந்திர மூர்த்தி சமேத 41 அடி உயர ராமபக்த சாந்த ஆஞ்சநேயர் சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நாளை (23ம் தேதி) நடக்கிறது.
இதனை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் இன்று (மே., 22ல்) துவங்குகிறது. நாளை (மே., 23ல்) காலை 7:30 மணி முதல், 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை கஸ்தூரி ரங்கன் பட்டர் செய்து வருகிறார்.