சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் பூப்பல்லக்கு உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2019 12:05
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா மே 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆண்டு தோறும் 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் 5ம் திருவிழாவாக திருக்கல்யாணமும், 8ம் திருவிழாவாக புரவி எடுப்பும், 9ம் திருவிழாவாக தேரோட்டமும் நடைபெற்றது.
கடைசி திருவிழாவான பூப்பல்லக்கு உற்ஸவம் நேற்று முன்தினம் (மே., 21ல்) இரவு நடந்தது. மல்லிகை பூக்களாலும், மின்விளக்காலும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் சுவாமி அருள்பாலித்தார். பின்னர் மாடுகள் பூட்டிய சப்பரத்தில் பல்லக்கு ஏற்றப்பட்டு 4:45 மணிக்கு நான்கு ரத வீதிகள் வழியாக சுவாமி உலா வந்தார்.அவருடன் விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், பிடாரி அம்மன் சிங்க வாகனத்திலும் உலா வந்தனர்.