பதிவு செய்த நாள்
23
மே
2019
01:05
குன்னூர் : குன்னூர் அருகே சின்ன வண்டிச்சோலை புனித அந்தோணியார் குருசடியின், 115வது ஆண்டு விழா துவங்கியது.குன்னூர் வெலிங்டன் பேரக்ஸ் சின்ன வண்டிச்சோலை புனித அந்தோணியார் குருசடியில், பங்கு தந்தை அந்தோணிசாமி தலைமையில், கொடியேற்றத்துடன், 115வது ஆண்டு திருவிழா துவங்கியது. நேற்று (மே., 22ல்) சிறப்பு திருப்பலி, ஆராதனை ஆகியவை நடந்தன.
தொடர்ந்து ஜூன், 2ம் தேதி வரை தினமும் நவநாள் ஜெபம், திருப்பலி நடக்கிறது. திருவிழா நாளான, 2ம் தேதி திருநாள் சிறப்பு திருப்பலி, அன்பின் உணவு, நவநாள் புனிதரின் சுருபம் அலங்கார தேர் பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தையர், உதவி பங்கு தந்தையர், புனித அந்தோணியார் பஜனை சங்கத்தினர் செய்து வருகின்றனர்.