மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.21 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2019 02:05
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் மூன்று மாதங் களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம். கடந்த மார்ச் மாதத்திலிருந்து மே, 21ம் தேதி முடிய பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கோவிலில் நடந்தன.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் சரவணன், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ராமு ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு உண்டியலில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர்.மொத்தமுள்ள, 20 பொது உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, 20 லட்சத்து, 99 ஆயிரத்து, 861 ரூபாயும், 147 கிராம் தங்கமும், 155 கிராம் வெள்ளியும் இருந்தது. கோவில் ஆய்வாளர் சரண்யா, பரம்பரை அறங்காவலர் வசந்தா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.