’இவனை நாம் பிள்ளையாக பெற, கணவனாக அடைய, இவளை மனைவியாக பெற என்ன பாக்கியம் செய்தோமோ!’ என்றெல்லாம் அவ்வப்போது நாம் மகிழ்கிறோம். உண்மையில் பாக்கியவான்கள் யார் என்று ஆண்டவரிடம் கேட்டால், அவர் அடையாளம் காட்டும் நபர்கள் வேறு மாதிரியாக உள்ளனர். எளிமையானவர்கள், தர்மத்தைக் காப்பவர்களுக்கு சொர்க்க சாம்ராஜ்யம் காத்திருக்கிறது. பணிவுள்ளவர்களே இந்த மண்ணின் அதிபர்கள். தர்மசிந்தனை கொண்டவர்களின் பசியும், தாகமும் போக்கப்படும். கருணை உள்ளவர்கள் மீது ஆண்டவரின் கருணை பொழியும். தூய உள்ளம் படைத்தவர்களுக்கு கடவுள் காட்சியளிப்பார். அமைதியைப் பரப்பி, பிணக்குகளைப் போக்கி சமாதானமுடன் வாழ்பவர்கள் கடவுளின் குழந்தைகள் ஆவர். இவர்களே பாக்கியவான்கள் என்கிறார் இயேசு.