யூதமதத்தைச் சேர்ந்த ஒருவர் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு நாயகத்தின் முன்னர் நிறுத்தப்பட்டார். விசாரித்த போது, முஸ்லிம் இளைஞர் ஒருவர், தான் திருடிய பொருளை அவரது வீட்டில் வைத்த விஷயம் தெரியவந்தது. செய்யாத குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்டதை அறிந்த நாயகம் கோபம் கொண்டார்.
“ குற்றம் செய்யாதவனுக்கு தண்டனை கொடுக்க முடியாது. முஸ்லிமாக இருந்தும் தன் தவறை மறைத்து, மற்றவர் மீது பழி சுமத்தியவனே தண்டிக்கத்தக்கவன்” எனக் கூறி தண்டனை கொடுத்தார். அப்போது,“எனது மகள் பாத்திமா திருடினாலும் கூட, அவரது கைகளை வெட்டுவதற்கு கட்டளையிடுவேன்” என்று ஆணித்தரமாக தெரிவித்தார். இதன் மூலம் நீதிக்குப் பின் பாசம் என்பதை எடுத்துக் காட்டினார்.