மானாமதுரை, : மானாமதுரை கீழ்கரை சுந்தரபுரம் அக்ரஹாரம் சுந்தர விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பல்வேறு வகை அபிஷேக, ஆராதனை நடந்தது. விநாயகர் துதி பாடல்களை பெண்கள் பாடி அர்ச்சனை செய்தனர். வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் அருகில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை டிரஸ்டியினர் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.