சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி சுயம்பிரகதீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உண்டு. அஷ்டமியை முன்னிட்டு சன்னதி முன் நேற்று (மே., 27ல்) காலை 10:00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. பைரவருக்கு 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் குருக்கள் ரவி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.