Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இலவசமா... தேவையில்லை சகலகலா வல்லியின் கருணை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தரமே என்றும் நிரந்தரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2019
04:05

“செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே” இந்தப் பாடலை இளவயதில் பள்ளிப்பாடத்தில் படிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. இனிமையான கவிதை அது. ஆனால், பாரதியார் எழுதிய இந்தப்பாடல் ஒரு காலத்தில் மூன்றாம் பரிசு தான் பெற்றது.


‘ஆச்சரியமாக இருக்கிறதே!’ என்பவர்கள் தொடருங்கள். சென்னையில் ஒரு இலக்கிய அமைப்பினர் கவிதைப்போட்டி அறிவித்தனர். முதல்பரிசு ரூ.300, இரண்டாம் பரிசு ரூ.200, மூன்றாம் பரிசு ரூ.100. பாரதியாரின் நண்பர்கள், “பாரதி! நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டால், நீங்களே முதல் பரிசு பெறுவீர்கள். உங்கள் பாட்டுக்கு ஏது எதிர்பாட்டு?” என்று தூண்டினர். பாரதியாரும் நண்பர்களுக்காக ஒப்புக்கொண்டார். கவிதை அனுப்பப்பட்டது. அந்தக்கவிதை தான் மேற்கண்ட பாடல். இலக்கிய அமைப்பினர், பாரதியின் கவிதைக்கு மூன்றாம் பரிசு அறிவித்தனர். நண்பர்கள் கொதித்துப் போய் பாரதியிடம் வந்தார்கள். “பார்த்தீர்களா! தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற கவிதைகளில் எந்தச் சுவையும் இல்லை. இருப்பினும், அவற்றை முதல் இரண்டு பரிசுகளுக்கு தேர்வு செய்துள்ளனர். உங்கள் பாட்டு உயர்வானதாய் இருந்தும் ஒதுக்கி விட்டார்களே!” என்றனர். பாரதி அமைதியாக, “அவர்கள் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்திருந்தார்களோ, அவருக்கு அதைக் கொடுக்க கையாண்ட குறுக்கு வழியே இந்தப் போட்டி. இதை பெரிதுபடுத்தாதீர்கள்,” என பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டார். அன்று மூன்றாம் பரிசு பெற்ற பாடல், இன்று முதல்தரமாக மக்கள் நெஞ்சில் நிற்கிறது. மற்ற பாடல்களை எழுதியவர்கள் பற்றியோ, அந்தப் பாடல்கள் பற்றியோ இதுவரை தகவல் கூட இல்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar