பதிவு செய்த நாள்
29
மே
2019
12:05
திருப்பதி: திருமலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் குடும்பத்தினருடன் வழிபட்டார். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன் குடும்பத்தினருடன் நேற்று காலை, கோவில் முன் வாசலுக்கு வந்தார்.
அவரை, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனர். தரிசனம் முடித்து திரும்பிய அவரை, ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, தேவஸ்தான அதிகாரிகள், ஏழுமலையான் திருவுருவப்படம், லட்டு, வடை, தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவற்றை வழங்கினர். திருமலையில் ஒய்.எஸ்.ஜெகன் ஆந்திர மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, 30ம் தேதி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ளார், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இந்த தேர்தல் வெற்றிக்கு, ஏழுமலையான் ஆசீர்வாதத்தை பெற, நேற்று அவர் திருமலைக்கு வந்தார். இரவு, திருமலையில் தங்கிய அவர், இன்று காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். விஜயவாடாவில், வரும் 30ல் நடைபெறவுள்ள, பதவியேற்பு விழாவிற்கு வருகை தரும்படி, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, ஜெகன் மோகன் ரெட்டி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.