பதிவு செய்த நாள்
30
மே
2019
02:05
செஞ்சி: அனந்தபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று (மே., 29ல்) நடந்தது.
செஞ்சி அடுத்த அனந்தபுரம் சின்ன தெருவில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
நேற்று (மே., 29ல்) நடந்தது. அதனையொட்டி, கடந்த 28ம் தேதி காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமானர் பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஆகியவை நடந்தது.
அன்று மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று (மே., 29ல்) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், நாடி சந்தானம் தத்துவர்ச்சனையும், 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்து, 11:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
மதியம் 2:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.