பதிவு செய்த நாள்
31
மே
2019
12:05
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில், 182ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று (மே., 30ல்) நடந்தது.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் இ.சி.ஆர். சந்திப்பில் உள்ள குரு சித்தானந்தா கோவிலில், உள்ள குரு சித்தானந்தா சுவாமிக்கு, 182ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று (மே.,30ல்) நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மே., 29ல்) மாலை 6:00 மணிக்கு, கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனைநடந்தது.நேற்று (மே., 30ல்) காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா ருத்ர ஜபம் நடந்தது.
இதில், கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலம் ராஜா சாஸ்திரிகள் தலைமையில், குருகுல மாணவர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு 1008 லிட்டர் பால் மற்றும் பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. காலை 8:00 மணிக்கு குருபூஜை நேர்முக வர்ணனையும், காலை 9:00 மணிக்கு பூர்ணாஹூதி, காலை 9:30 மணிக்கு கலசம் புறப்பாடும், காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.தொடர்ந்து மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.குருபூஜையையொட்டி நேற்று (மே., 30ல்) மாலை சூசைராஜ்
குழுவினரின் நாட்டியாஞ்சலி, நவாப் ராஜமாணிக்கம், ராமலிங்க சிவா குழுவினரின் குரு சித்தானந்தா சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு சில அற்புதங்கள் என்ற தலைப்பில் நாடகம் நடந்தது.விழா ஏற்பாடுகளை தேவசேனாதிபதி குருக்கள் மற்றும் கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன் தலைமையிலான ஊழியர்கள் செய்திருந்தனர்.