புதுச்சேரி: அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திக்காக, மணக்குள விநாயகருக்கு, 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது.
அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கி நேற்றுடன் (மே., 30ல்)நிறைவுடைந்தது. அக்னி நட்சத்திர காலங்களில் புதுச்சேரியில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் (மே., 30ல்) நிறைவடைந்ததையடுத்து, புதுச்சேரியில் பெரும்பாலான கோவிலில்கள் அக்னி நட்சத்திர நிவர்த்தி சாந்தி அபிஷேகம் நடந்தது. மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமிக்கு 1008 இளநீர் அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.சின்னசுப்ராயபிள்ளை வீதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இளநீர், பால் பன்னீர் மற்றும் மங்கள திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
அம்மனுக்கு வெண்ணெய் சார்த்தப்பட்டு, மாலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.