செந்துறை: செந்துறை அருகே சிறுகுடியில் மலையலங்கரா சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 300 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு விழா நடந்தது.
கடந்த மே 30 அன்று மாலை புரவிகளுக்கு கண் திறந்து அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. அதன் பின் சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோவில் முன்புள்ள திடலுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டு அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்று அதிகாலை மீண்டும் மலையலங்கார சுவாமி–செம்பாயி அம்மன் கோயில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு மாவிளக்கு எடுத்தல், தேவராட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் அய்யனார் மலையில் உள்ள மலையலங்கார சுவாமி கோயிலுக்கு புரவிகள் புறப்பட்டன. கோயில் பொட்டலில் இறக்கி வைத்து புரவிகளுக்கு நிறைவான அபிஷேக, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.