அலங்காநல்லூர்:பாலமேடு அருகே 66 மேட்டுபட்டியில் ஸ்ரீ மாலை சுவாமி கோயில் கும்பாபி ஷேகம் நடந்தது.பின் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. பக்தர்களுக்கு புனிததீர்த்தம், பூஜைமலர்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராஜகம்பளத்தார் நாயக்கர்கள் உறவின்முறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.