முதலில் உழைப்பு, பிறகு தான் ஆன்மிகம் என்னும் கருத்து சரிதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2012 04:03
சரிதான்.... ஆனால், தங்கள் கொள்கை எந்த அடிப்படையிலானது என்று புரியவில்லை. ஆன்மா என்றால் உயிர். இதற்கு நாம் செய்யும் ஒரே உபகாரம் புண்ணியம் தான். அதாவது, நமது உடலுக்கு ஆடை ஆபரணங்கள் அணிவித்து அழகு பார்க்கிறோம். தரமான உணவை சாப்பிட்டு உடலை வளர்க்கிறோம். ஆனால், இத்தனையும் உடல் இருக்கும் வரை தான். பிறகு மண்ணோடு கலந்து விடுகிறது. ஆனால், உடலில் இருந்து பிரியும் உயிர், அடுத்த பிறவியை எடுக்கிறது. அப்பொழுது இன்பமாய் வாழ இந்த உயிருக்கு இப்போது செய்யும் புண்ணியம் தான் பலம். உழைப்பால் பலனடைவது உடல். ஆன்மிகத்தால் பலனடைவது உயிர். உடல் இப்பிறவியோடு முடிந்து விடும். எத்தனை பிறவி எடுத்தாலும் உயிர் ஒன்று தான். அதற்கு முதலிடம் கொடுப்பது என்பது புரிகிறதா? செய்யும் தொழிலே தெய்வம் என்பது உழைப்பதையே வழிபாடாக இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் மனப்பக்குவமாகும்.