ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் அதைப் போற்றுகின்றன. அதனால் ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்குத் தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது. அதனால் அதை முதல் நாளே பறித்துத் தயார் நிலையில் வைக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனையோ, விஷ்ணு சகஸ்ரநாமமோ சொல்ல வேண்டும். இது முடியாவிட்டாலும் விஷ்ணு பற்றிய நூல்களைப் படிக்க வேண்டும். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியமாகும். வீட்டில் செல்வம் பெருகும். சந்ததி வளரும்.