பதிவு செய்த நாள்
07
ஜூன்
2019
12:06
குளித்தலை: வாலாந்தூர் கிராமத்தில், சக்தி மாரியம்மன், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்சாயத்து,
வாலாந்தூர் கிராமம் குடித்தெருவில் சக்தி மாரியம்மன், சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதை யொட்டி, நேற்று (ஜூன்., 6ல்) காலை குளித்தலை கடம்பர்கோவில் காவிரியாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் யாக சாலையில் மூன்று கால பூஜைகள் நடத்தினர். யாக சாலையில் பொது மக்கள், பக்தர்கள் வழங்கிய தானியங்கள், திரவ பொருட்களை தீக்குண்டத்தில் போட்டு யாகம் நடத்தப்பட்டது. நேற்று (ஜூன்., 6ல்) காலை, 9:00 மணியளவில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்க் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அம்மன், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.