வேடசந்தூர்:விட்டல்நாயக்கன்பட்டியில் முத்தாலம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அம்மன் கண் திறப்பு, சப்பரத்தில் சன்னதி வந்தடைதல், மாவிளக்கு, அக்கினிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.