கடலாடியில் செல்வகாமாட்சியம்மன் கோயிலில் பால்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2019 12:06
கடலாடி: செல்வ காமாட்சியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா, வைகாசி பொஙகல் விழா நடந்தது.
மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி செய்யப்பட்டு, புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது. பெண்கள் பொங்கலிட்டனர். நேர்த்திக்கடன் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து கடலாடி நகர்வீதிகளில் வலம் வந்தனர். பகலில் அன்னதானமும், மாலையில் உலக நன்மைக்கான விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.