பதிவு செய்த நாள்
10
ஜூன்
2019
12:06
உடுமலை:உடுமலை திருப்பதி, வேங்கடேச பெருமாள் கோவில் சுவாமி சிலைகளுக்கு ஜலாபிஷேகம் நடந்தது.உடுமலை, தளி ரோடு, செங்குளம் அருகில் உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் கட்டமைப்பு பணிகள் நடக்கிறது.
கோவில் கும்பாபிஷேகம்,ஜூலை மாதம் நடத்த, திருப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் படுகிறது.கட்டமைப்பு பணிகள் முழுமையடைந்து, சன்னதிகளில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வேங்கடேச பெருமாள், அலமேலு தாயார், சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஹயக்கிரீவர் உள்ளிட்ட சுவாமிகளின் மூலவர், உற்சவர் சிலைகள் மற்றும் கோவிலில் நிறுவப்பட உள்ள கொடிமரம் ஆகியவை, எஸ்.வி., மில் மைதானத்திலிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து
வரப்பட்டன.நேற்று (ஜூலை 9ல்) கோவிலில் சுவாமி சிலைகளுக்கு, திருமஞ்சன ஜலாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், சுவாமிகளுக்கு குடங்களில் தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர்.