புதுச்சேரி:புதுச்சேரி வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில், திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி பஸ் நிலையம் அருகே உள்ள வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில், நேற்று (ஜூலை 9ல்) நம்பெருமாள் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிவ கலியபெருமாள், சிவபெருமானின் திருவாசகம் சம்பந்தமான பாடல்கள் பாடிக்கொண்டு, அதில் உள்ள பொருளின் அர்த்தங்களை கூறினார்.திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியில் ஏராளமான சிவபக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, நம்பெருமாள் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பு மற்றும் ஆலய நிர்வாகிகள் பங்கேற்றனர்.