பிரார்த்தனை செய்யும் போது, தமக்கு வேண்டிய விஷயங்களை மட்டுமே வேண்டுதலாக வைக்கிறார்களே. இது சுயநலமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2012 03:03
மனிதனுக்குச் சுயநலம் கூடாது என்ற அடிப்படையில் நீங்கள் இக்கேள்வியைக் கேட்கிறீர்கள். கடவுளுக்குத் துதிப்பவன், துதிக்காதவன் என்ற பேதமில்லை. நீங்கள் வேண்டினாலும், வேண்டாவிட்டாலும் அவன் இயல்பு அருள்செய்வது தான். சுயநலம் என்பது கூட பொதுநலத்தில் அடங்கிவிடக்கூடியது தான். தனித்தனியாக இருக்கும் குடும்பத்தில் அமைதி இருந்தால் அந்த சமுதாயமே அமைதியாகி விடும் தானே. குழந்தை ஆசைப்பட்ட பொருளை, அம்மாவிடம் கேட்பது போல, மன விருப்பங்களைக் கடவுளிடம் வேண்டிப் பெறுவதில் தவறேதும் இல்லை.