உத்தரகோசமங்கை திரவுபதி அம்மன் அருகே கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2019 02:06
உத்தரகோசமங்கை:உத்தரகோசமங்கை அருகே நத்தம் குளபதம் ஊராட்சிக்கு உட்பட்ட வைகை கிராமத்தில் பழமையும் புரதான சிறப்பும் பெற்றதிரவுபதி அம்மன் கோயில் உள்ளது. திருப்பணிகளுக்கு பின் திரவுபதி அம்மன், விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
பகலில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியாளர்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டினர்கள், வைகை, ராமேஸ்வரம், அருப்புக்கோட்டை பகுதி மக்கள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.