முதுகுளத்தூர்: நேற்று (ஜூன்., 12ல்) காலை 7:00 மணிக்கு விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் வேல் குத்தியும், குதிரை தூக்கி காளியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்பு கிராம மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு எருதுகட்டு திருவிழாவை முன்னிட்டு காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.எருதுகட்டு திருவிழாவில் முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.