இடையமேலூர் மாயாண்டி சித்தர் பீடத்தில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2019 02:06
சிவகங்கை: இடைய மேலூர் மாயாண்டி சித்தர் குருபீட கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
இக்கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 9ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், முதல் காலயாகசாலை பூஜைகளுடன் தினமும் யாகசாலை பூஜைகள், வேள்விகள் நடந்தது. 5ம் நாளான நேற்று (ஜூன்., 13ல்) காலை 5:00 மணிக்கு ஆறாம் கால பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. நேற்று (ஜூன்., 13ல்) காலை 8:15 மணிக்கு சர்வசாதகம் பைரவ குருக்கள் கோபுர கலத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மூலஸ்தான சித்தர் பீடத்திற்கு மகா அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வேதியரேந்தல் பிரத்யங்கிரா தேவி கோயில் சுவாமி மாதாஜி, பாண்டியன், மகாராஜா சுவாமிகள் தலைமை வகித்தனர். மாயாண்டி சித்தர் அறக்கட்டளை தலைவர் நாச்சியப்பன், செயலர் அருணாசலம், பொருளாளர் போஸ் உட்பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.