பாலமேடு: பாலமேடு அருகே பொந்துகம்பட்டியில் சித்தி விநாயகர், முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி முதல்நாள் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. 2ம் நாளில் சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தன. மூன்றாம் நாளான நேற்று (ஜூன் 13ல்.,) புனித தீர்த்த குடங்கள் கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.
சிவாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொந்துகம்பட்டி கிராமத்தினர் செய்தனர்.
*வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே செமினிப்பட்டியில் சொக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், நான்கு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. அர்ச்சகர் தேவதாஸ் தலைமையில் புனிதநீர் கடம் புறப்படாகி கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.